உடுமலை அருகே திருமூர்த்தி மலையில் ஓபிஎஸ் அணி அதிமுகவினர் மண்சோறு சாப்பிட்டு வழிபாடு

மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்பு

Update: 2025-01-06 04:05 GMT
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி மலையில் உள்ள பிரசித்தி பெற்ற அமணலிங்கேஸ்வரர் கோவிலில் அனைத்திந்திய அண்ணாதிராவிட முன்னேற்ற கழக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவின் ஒருங்கினைப்பாளரும் முன்னால் முதல்வருமான ஒ.பன்னீர் செல்வம் தலைமையில் தமிழகத்தில் மீண்டும் ஆட்சி அமைய கழக அமைப்பு செயலாளர் மடத்துக்குளம் மாரிமுத்து தலைமையில் ஒ.பி.எஸ் அணியினர் மண் சோறு சாப்பிட்டு பிராத்தனை செய்தனர். அமணலிங்கேஸ்வரர் கோவிலில் மண்சோறு சாப்பிட்டு வேண்டினால் வேண்டிய கிடைக்கும் என்பதால் இந்த வழிபாட்டில் ஈடுபடவதாக கூறிய அவர்கள் கோவில் முன்பு பாலாற்றின் அருகே சுடும்பாறையில் அமர்ந்து வெற்றுபாறையில் உணவை பரிமாறி மண்சோறு சாப்பிட்டு வேண்டி கொண்டதுடன் பொதுமக்களுக்கும் பக்தர்களுக்கும் அண்ணதானம் வழங்கினர் மேலும் அ.இ.அ தி.மு.க வில் பிளவுகள் மறைந்து ஒன்றுபட்டு ஒரே அதிமுகவாக ஆகவும் மீண்டும் ஒ.பி.எஸ் தலைமையில் தமிழகத்தில் அம்மா ஆட்சி அமையவும் வழிபாடு செய்தனர் இந்நிகழ்வில் திருப்பூர் புறநகர் மாவட்ட கழக செயலாளர் காமராஜ் மாநகர் மாவட்ட கழக செயலாளர் சண்முகம் வடக்குமாவட்ட கழக செயலாளர் கனிஸ்கா சிவக்குமார் மற்றும் தொகுதி கழக செயலாளர் லட்சுமன சாமி உட்பட அ.இ.அ.தி.மு.க தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவினர் கலந்துகொண்டனர்

Similar News