கூழாங்கற்கள் கடத்திய லாரி பறிமுதல்

பறிமுதல்

Update: 2025-01-06 04:06 GMT
உளுந்துார்பேட்டை அருகே கூழாங்கற்கள் கடத்திய லாரியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கள்ளக்குறிச்சி மாவட்ட உதவி புவியியாளர் ரகுநாத் குமார், தனி வருவாய் ஆய்வாளர் ராஜவேல் ஆகியோர் நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் மேப்புலியூர்- நாச்சியார்பேட்டை சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே வந்த லாரியை தடுத்து நிறுத்தினர். உடன் லாரி டிரைவர், லாரியை நிறுத்திவிட்டு தலைமறைவானார்.பின்னர் லாரியை சோதனை செய்தபோது அனுமதியின்றி 3 யூனிட் கூழாங்கற்கள் கடத்தி சென்றது தெரிய வந்தது. அதன் பேரில் லாரியை பறிமுதல் செய்து உளுந்துார்பேட்டை போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். இதுகுறித்து உளுந்தூர்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் போலீசார் வழக்கு பதிந்து லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

Similar News