பரமத்தி வேலூர் அருகே விவசாயி திடீர் மாயம்.
பரமத்தி வேலூர் அருகே விவசாயி திடீர் மாயம் போலீஸ் சர்வீஸ் சார்ந்த நடத்தி வருகின்றனர்.;
பரமத்திவேலூர், ஜன.6: பரமத்திவேலூர் தாலுகா பாண்டமங்கலம் அருகே கொளக்காட்டு புதூர் பகுதியை சேர்ந்தவர் ரவீந்திரகுமார் (50). இவர் இரவு தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அவரது மகன் லோகேஸ்வரனும் தூங்கிக் கொண்டிருந்தார். பின்னர் காலை எழுந்து பார்த்த போது அவரது தந்தை ரவீந்திரகுமாரை காணவில்லை. இதனால் உறவினர் வீடுகளுக்கும், நண்பர்கள் வீடுகளுக்கும் மற்றும் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று ரவீந்திரகுமாரை தேடி பார்த்துள்ளனர். ஆனால் ரவீந்திரகுமாரை கண்டுபிடிக்க முடியவில்லை. இது குறித்து ரவீந்திரகுமாரின் மகன் லோகேஸ்வரன் பரமத்தி வேலூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து ரவீந்திரகுமார் தானாக சென்று விட்டாரா,எங்கு சென்றார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.