ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்க ஆலோசனை கூட்டம்

ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கம் சார்பாக நீண்ட நாட்களாக நிறைவேற்றப்படாமல் இருக்கும் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி நாளை சாலை மறியல் போராட்டம் ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்க ஆலோசனை கூட்டத்தில் முடிவு

Update: 2025-01-07 01:49 GMT
தர்மபுரி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தர்மபுரி மாவட்ட ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்க ஆலோசனை கூட்டம் இன்று ஜனவரி 6 நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஊரக வளர்ச்சி அலுவலர்களின் நீண்ட கால கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் எனவும், நிறைவேற்றாமல் இருக்கும் தமிழக அரசை கண்டித்து ஜனவரி 07 நாளை மாநிலம் தழுவிய சாலை மறியல் போராட்டம் நடைபெற உள்ளது. இந்த போராட்டத்தில் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஊரக வளர்ச்சி அலுவலர்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என இன்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Similar News