தேமுதிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

தர்மபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு தர்மபுரி மாவட்ட தேமுதிக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் நூற்றுக்கும் மேற்பட்ட தேமுதிகவினர் கைது

Update: 2025-01-07 01:56 GMT
தர்மபுரி கிழக்கு மாவட்டம் சார்பாக தமிழக அரசை கண்டித்து பிஎஸ்என்எல் அலுவலகம் அருகே மாவட்டச் செயலாளர் குமார் தலைமையில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில்அரசு சார்பில் வழங்கப்படும் பொங்கல் தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் வழங்கிட வேண்டும், அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையை கண்டித்தும் தமிழகத்தில் மாணவிகள் மற்றும் பெண்களுக்கு உரிய பாதுகாப்பை உறுதி செய்திடவேண்டும், புயல் மழையால் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கிட வேண்டும்.கஞ்சா மற்றும் மதுபோதை இல்லாத மாநிலமாகதமிழகத்தை உருவாக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கையில் பதாகைகள் ஏந்தியவாறு கண்டன கோஷங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக கழகவைத் தலைவர் மருத்துவர் இளங்கோவன் கலந்து கொண்டார் முன்னதாக வரவேற்புரை நகர கழக செயலாளர் சுரேஷ் வரவேற்றார் முன்னிலை மாநில கேப்டன் மன்ற துணை செயலாளர் மாரிமுத்து தொழிற்சங்க துணை செயலாளர் விஜய் வெங்கடேஷ் மாவட்ட அவைத் தலைவர் தங்கவேல் மாவட்ட பொருளாளர் சீனிவாசன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட தேமுதிக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறை சார்பில் அனுமதி வழங்காததால் நூற்றுக்கும் மேற்பட்ட தேமுதிகவினர் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

Similar News