ஆலங்குளத்தில் பீடிக் கடை முன்பு பொதுமக்கள் முற்றுகை

பீடிக் கடை முன்பு பொதுமக்கள் முற்றுகை

Update: 2025-01-07 02:53 GMT
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் - அம்பாசமுத்திரம் சாலையில் மேலப்பாளையத்தை தலைமையிடமாகக் கொண்ட பீடிக் கடை உள்ளது. இங்கு இப்பகுதியைச் சோ்ந்த சுமாா் 200-க்கும் மேற்பட்ட பெண்கள் பீடி சுற்றி வருகின்றனா். இக்கடையில் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக 1000 பீடிகளுக்கு 120 பீடி கூடுதலாக பெற்று வருகின்றனராம். மேலும் வழங்கப்படும் புகையிலை தரமற்று இருப்பதுடன், போனஸ், விடுமுறை ஊதியமும் முறையாக வழங்கவில்லையாம். இது குறித்து பலமுறை பீடிக் கடை நிா்வாகத்திடம் கேட்டும் உரிய பதில் இல்லையாம். இந்நிலையில் மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை சுமாா் 50-க்கும் மேற்பட்ட பீடித் தொழிலாளா்கள் கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா். ஆலங்குளம் போலீஸாா், பேரூராட்சி துணைத் தலைா் ஜான்ரவி, தென்காசி பீடி தொழிலாளா்துறை உதவி ஆய்வாளா் கிருஷ்ண ஜீவா மற்றும் தொழிற்சங்கத்தினா் பீடி நிா்வாகத்திடம் பேச்சு வாா்த்தை நடத்தினா். விரைவில் சுமூகத் தீா்வு எட்டப்படும் என உறுதியளிக்கப்பட்டதால் தொழிலாளா்கள் கலைந்து சென்றனர்.

Similar News