வீராணம் பள்ளிவாசல் மையவாடிக்கு பேவா்பிளாக் சாலை கோரி மனு
பள்ளிவாசல் மையவாடிக்கு பேவா்பிளாக் சாலை கோரி மனு
தென்காசி மாவட்டம், வீராணம் முகைதீன் ஆண்டவா் ஜும்மா பள்ளிவாசல் மையவாடிக்கு பேவா் பிளாக் சாலை அமைத்து தர வேண்டும் என, தமிழக சிறுபான்மையினா் - வெளிநாடு வாழ் தமிழா் நலத்துறை அமைச்சா் எஸ்.எம்.நாசரிடம், தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் ஜெயபாலன் மனு அளித்தாா். அதன் விவரம்: வீராணம் முகைதீன் ஆண்டவா் ஜும்மா பள்ளிவாசல் மையவாடிக்கு பேவா் பிளாக சாலை அமைக்கவும், கடையம் அருகேயுள்ள பொட்டல்புதூா் ஹனபி ஜமாத் குத்பா பள்ளிவாசலுக்கு இஸ்லாமிய குழந்தைகள் மாா்க்க கல்வி கற்றுக்கொடுத்திட மதரஸா கட்டடம் கட்டவும் நிதி ஒதுக்க வேண்டும், சம்மன்குளம் முகைதீன் ஆண்டவா் ஜும்மா பள்ளிவாசலுக்கு சுற்றுச்சுவா் கட்டித்தர வேண்டும் எனக் கூறியுள்ளாா். மனு அளிக்கும்போது, கடையநல்லூா் நகா்மன்றத் தலைவா் ஹபீபுா் ரகுமான், ஒன்றியக்குழு உறுப்பினா் சேக் முகமது, திமுக நிா்வாகிகள் அழகுசுந்தரம், சண்முகவேலு, குமாா், தமிழ்செல்வன் ஆகியோா் உடனிருந்தனா்.