பாஜக செயற்குழு உறுப்பினர் சந்தனகுமார் மறைவு: அஞ்சலி!
பாஜக செயற்குழு உறுப்பினர் சந்தனகுமார் மறைவு: மாநில துணைத் தலைவர் அஞ்சலி!
தூத்துக்குடியில் மறைந்த பாஜக செயற்குழு உறுப்பினர் சந்தனகுமார் திருவுருவ படத்திற்கு கட்சியின் மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். தூத்துக்குடி மாவட்டத்திற்கு வருகை தந்த பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி, தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக கட்சி அலுவலகத்தில் மறைந்த பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினரும் மத்திய அரசு வழக்கறிஞருமான சந்தனகுமார் திருவுருவ படத்திற்கு அஞ்சலி செலுத்தினார்.