கராத்தே போட்டியில் காங்கேயம் மாணவனுக்கு தங்கப்பதக்கம்
மாநில அளவிலான கராத்தே போட்டி காங்கேயம் மாணவன் தங்கப்பதக்கம் வென்று சாதனை
காங்கேயம் அடுத்த வாய்க்கால் மேட்டு பகுதி சேர்ந்த கராத்தே பயிற்சியாளர் சக்திவேல், பழனியம்மாள் தம்பதியினரின் இளைய மகன் ஸ்ரீராம் ரத்தினம் (19). இவர் சிறுவயதில் இருந்தே கரத்தை விளையாட்டின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டு தந்தையுடன் பயிற்சி மேற்கொண்டு வந்தார். தற்போது கோவை மாவட்டத்தில் கல்லூரி பயின்று வரும் ஸ்ரீராம் ரத்தினம் சென்னை மயிலாப்பூரில் நடைபெற்ற மாநில அளவிலான கரத்தை போட்டியில் கலந்து கொண்டார். இப்போட்டியில் 1000க்கும் மேற்பட்டோர் தமிழகமெங்கும் இருந்து வந்து கலந்து கொண்டு போட்டியிட்ட நிலையில் 19 வயதில் 84 கிலோ எடை பிரிவில் கலந்து கொண்ட ஸ்ரீராம் ரத்தினம் தன்னுடன் போட்டியிட்ட 40 பேரை வீழ்த்தி மாநில அளவில் முதலிடத்திலும் தங்கப் பதக்கத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளார்.