ஜல்லிக்கட்டு முன் பதிவு நிறைவு
மதுரை மாவட்டம் ஜல்லிக்கட்டு போட்டிக்கான முன் பதிவு நிறைவு பெற்றது.
மதுரை மாவட்டத்தில் நடைபெற உள்ள மூன்று ஜல்லிக்கட்டு போட்டிகளில் முன்பதிவு இன்று (ஜன.7) மாலையுடன் நிறைவு பெற்றது. ஜல்லிக்கட்டு போட்டிக்கான மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளுக்கான ஆன்லைன் டோக்கன் முன்பதிவு நடைபெற்ற நிலையில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய 3 ஜல்லிகட்டு போட்டிகளில் பங்கேற்க 8,000+ மாடுபிடி வீரர்களும், 10,000+ காளைகளும் முன்பதிவு செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.