காசிபாளையம், தீயில் சிக்கிய மனைவியை காப்பாற்ற சென்ற கணவன் உயிரிழப்பு.

காசிபாளையம், தீயில் சிக்கிய மனைவியை காப்பாற்ற சென்ற கணவன் உயிரிழப்பு.

Update: 2025-01-07 14:48 GMT
காசிபாளையம், தீயில் சிக்கிய மனைவியை காப்பாற்ற சென்ற கணவன் உயிரிழப்பு. கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுகா, முடிகனம் அருகே உள்ள காசிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சிவன்மலை வயது 65. இவரது மனைவி நல்லம்மாள். டிசம்பர் 9-ம் தேதி வீட்டில் சமையல் செய்த போது நல்லம்மாள் மீது திடீரென தீ பற்றியது. இதனைப் பார்த்து சிவன்மலை தனது மனைவியை காப்பாற்ற முயன்றுள்ளார். இருவரும் தீயில் சிக்கினர். அவர்களை கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். இதில் சிகிச்சை பலனின்றி சிவன்மலை டிசம்பர் 6ஆம் தேதி உயிரிழந்தார். சம்பவம் குறித்து மகள் சுமதி அளித்த புகாரில்,சின்ன தாராபுரம் காவல் துறையினர் சிவன்மலை உடலை உடற்கூறு ஆய்வுக்காக அதே மருத்துவமனை சவக்கிடங்குக்கு அனுப்பி வைத்து, சின்ன தாராபுரம் காவல் துறையினர், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News