சோழசிராமணி அருகே டிராக்டரில் இருந்து தவறி விழுந்து விவசாயி பலி.
சோழசிராமணி அருகே டிராக்டரில் இருந்து தவறி விழுந்து விவசாயி பலி போலீசார் விசாரணை.
பரமத்திவேலூர், ஜன.7: பரமத்திவேலூர் தாலுகா சோழசிராமணி அருகே தேவம்பா ளையம் பகுதியை சேர்ந்தவர் இளையப்பன் (வயது 60), விவசாயி. இவர் தனது தோட்டத்தில் நிலக்கடலை பயிரிட்டு இருந்தார். இந்நிலையில் நிலக்கடலைக்காயை பறித்து விட்டு கொடியை தோட்டத்தில் போட்டு வைத்திருந்தார். ஆடுக ளுக்கு தீவனத்திற்காக நிலக்கடலை செடியை இளையப்பன், அவரது அண்ணன் தனபால் (65) ஆகியோர் டிராக்டரில் ஏற்றிக்கொண்டு வந்து போர் போடுவதற்காக டிராக்டரை வீட்டின் அருகே நிறுத்தினர். அப்போது டிராக்டரில் நிலக்கடலை செடிக்கு மேல் இருந்த இளையப்பன் கீழே இறங்குவ தற்காக அவரது அண்ணன் தனபால் ஏணியை எடுத்து வர சென்றார். இந்நிலையில் இளையப்பன் டிராக்டரில் இருந்து இறங்க முயன்றார். அப்போது எதிர்பாராதவிதமாக நிலை தடுமாறி கீழே விழுந்த அவர் படுகாயம் அடைந்தார். அதை பார்த்த அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் இளையப்பனை மீட்டு திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத் தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் இளையப்பன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். சம்பவம் பற்றி அறிந்து வந்த ஜேடர்பாளையம் போலீசார் இளையப்பன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.