தாராபுரத்தில் குடிநீர் வராததை கண்டித்து சாலை மறியல்

தாராபுரம்-கரூர் சாலை அம்பேத்கர் நகர் பொதுமக்கள் 3- மாதங்களாக குடிநீர் வராததை கண்டித்து காலிக் குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2025-01-07 15:45 GMT
தாராபுரத்தை அடுத்த கொளத்துப்பாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட 11-வது வார்டு அம்பேத்கர் நகரில் சுமார் 1000 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாசித்து வருகின்றனர். கடந்த 3- மாதங்களாக குடிநீர் வராததை கண்டித்து அம்பேத்கர் நகர் பகுதி பொதுமக்கள் தாராபுரம்-கரூர் புறவழிச் சாலையில் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். அம்பேத்கர் நகர் பகுதியில் குடிநீர் சின்டெக்ஸ் டேங்க் உடைந்துள்ளதாகவும் சின்டெக்ஸ் டேங்க் உடைந்ததில் இருந்து குடிநீர் குழாய் நீண்ட நாட்களாக சீரமைக்கப்படாமல் இருப்பதாகவும் குற்றச்சாட்டு தெரிவித்தனர்.  பலமுறை சம்பந்தப்பட்ட கொளத்துப்பாளையம் பேரூராட்சி நிர்வாகத்திடமும்  சம்பந்தப்பட்ட வார்டு உறுப்பினரிடம்அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் அம்பேத்கர் நகர் பகுதியில் குடிநீர் பிரச்சனை மற்றும் குப்பைகள் எடுப்பது ஊருக்குள்ளே பொது சுகாதார கழிப்பிடத்தை அமைத்து அதை முறையாக பேரூராட்சி நிர்வாகம் பராமரிக்காததை கண்டித்தும்  அடிப்படை வசதிகளை செய்து தர கோரிக்கை வைத்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.  மேலும் நீண்ட நாட்களாக அப்பகுதியில் உள்ள கழிவு நீர்கள் மற்றும் குப்பைகள் அகற்றப்படாததால் குழந்தைகளுக்கு தோல் நோய் ஏற்பட்டுள்ளதாகவும் மேலும் 30-க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு வைரஸ் காய்ச்சல் வந்துள்ளதாகவும் சிலர் வாந்தி பேதி எடுத்து வருவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தாராபுரம் போலீசார் மற்றும் பேரூராட்சியின் நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தியதில் சாலை மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Similar News