பால் விலையை உயர்த்த போராட்டம்.
மதுரை உசிலம்பட்டியில் பால் விலையை உயர்த்த கோரி பால் உற்பத்தியாளர்கள் போராட்டம் நடத்தினார்கள்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கருமாத்தூர் பால் உற்பத்தியாளர்கள் மையத்தில் பால் உற்பத்தி விலையை 10 ரூபாய் உயர்த்த கோரியும், கால்நடை தீவணத்திற்கு 50% மானியம் வழங்க கோரியும், பொங்கல் போனஸ் பெற வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கறவை மாடுகளுடன் இன்று (ஜன.7) கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். அதனை தொடர்ந்து, பொதுமக்களுக்கு இலவசமாக பால் வழங்கி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் ஒவ்வொரு ஆண்டும் போராடியே பால் விலையை உயர்த்தும் நிலை இல்லாது, ஒவ்வொரு ஆண்டின் உற்பத்தி மற்றும் தீவணங்களின் விலை உயர்வுக்கு ஏற்றால் போல் பால் விலையை அரசே உயர்த்தி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.