கீரம்பூர் அருகே மூதாட்டிக்கு கொலை மிரட்டல் விடுத்து தலைமறைவு

கீரம்பூர் அருகே மூதாட்டிக்கு கொலை மிரட்டல் விடுத்து தலைமறைவு போலீசார் விசாரணை.

Update: 2025-01-08 14:44 GMT
பரமத்தி வேலூர்,ஜன.7: வேலூர் பரமத்தி தாலுகா கீரம்பூர் மாரியம்மன் கோவில் அருகில் வசித்து வருபவர் எட்டிக்கவுண்டர் மனைவி ஜெயம் (74). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவருக்கும் பொது சுவர் சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் ஜெயம் வீட்டில் தனியாக இருந்தபோது அங்கு வந்த ரவிச்சந்திரன் ஜெயத்தை பார்த்து தகாத வார்த்தைகளால் திட்டி உள்ளார். இதில் இருவருக்கும் வரக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ரவிச்சந்திரன் ஜெயத்தை பார்த்து வெட்டி கொலை செய்து விடுவேன் என்று கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் மிகுந்த மன உளைச்சல் அடைந்த ஜெயம் அருகாமையில்' உள்ள மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் இது குறித்து பரமத்தி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சரண்யா ஜெயமுக்கு கொலை மிரட்டல் விடுத்து தலைமறைவாக உள்ள ரவிச்சந்தரனை வழக்குப்பதிவு செய்து தீவிரமாக வருகின்றனர்.

Similar News