குருபரப்பள்ளி அருகே வீடு புகுந்து திருட முயன்ற வாலிபர் கைது.
குருபரப்பள்ளி அருகே வீடு புகுந்து திருட முயன்ற வாலிபர் கைது.
கிருஷ்ணகிரி தாலுகா நெடுமருதி அருகே உள்ள பி.கே.பெத்தனப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் அசோக்குமார் (28) இவர் கடந்த 7- ஆம் தேதி அன்று காலை வீட்டில் தூங்கி கொண்டிருந்த போது வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர் ஒருவர் அசோக்குமாரின் வீட்டில் பீரோவை திறந்து உள்ளே இருந்த மணிபர்சை திருட முயன்ற போது இதை கவனித்த அசோக்குமார் அவரை பிடித்து குருபரப்பள்ளி காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். போலீசார் விசாரணை மேற்கொண்டதில் அவர் கொத்தபேட்டாவை சேர்ந்த தரண் (24) என்பது தெரியவந்தது. இதை அடுத்து அவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து டூவீலரை பறிமுதல் செய்தனர்.