மதுபான விற்பனை கிடையாது

திருவள்ளுவர் தினம், குடியரசு தினம் ஆகிய நாட்களில் மதுபான விற்பனை செய்யப்படமாட்டாது - மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி தகவல்

Update: 2025-01-09 14:32 GMT
திண்டுக்கல் மாவட்டத்தில் இயங்கி வரும் எப்.எல்.1 உரிமம் பெற்ற டாஸ்மாக் சில்லரை விற்பனை மதுக்கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுக்கூடங்கள், எப்.எல்.2, எப்.எல்.3, எப்.எல்.3ஏ, எப்.எல்.3ஏஏ மற்றும் எப்.எல்.11 உரிமம் பெற்ற உரிமத்தலங்கள் மற்றும் மதுபான விற்பனைத் தலங்கள் அனைத்தும் 15.01.2025(புதன்கிழமை) திருவள்ளுவர் தினம் மற்றும் 26.01.2025(ஞாயிற்றுக்கிழமை) குடியரசு தினம் ஆகிய நாட்களில் மூடப்பட்டிருக்கும். அன்றைய நாட்களில் மதுபானங்கள் விற்பனை செய்யப்படமாட்டாது. அன்றைய தினங்களில் விதிகளுக்கு மாறாக மது விற்பனை ஏதும் செய்யப்பட்டால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும், என மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.

Similar News