நீண்ட வரிசையில் காத்திருந்து பொங்கல் தொகுப்பு பொருட்களை வாங்கிச் சென்று பொதுமக்கள்...

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் ரேஷன் கடைகளில் பொங்கல் தொகுப்பு வழங்கல் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாங்கிச் சென்றனர்..

Update: 2025-01-09 14:41 GMT
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வரும் 14 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி ஒரு கிலோ சர்க்கரை, முழு கரும்பு வேஷ்டி சேலையுடன் பொங்கல் தொகுப்பினை இன்று தமிழக முதலமைச்சர் மு .க .ஸ்டாலின் சென்னையில் தொடங்கி வைத்தார் அதனையடுத்து மாநிலம் முழுவதும் பல்வேறு பகுதிகளிலும் ரேஷன் கடைகளில் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது அதன் ஒரு பகுதியாக இன்று திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அகமுடையார் தெரு சிங்களாந்தி திருத்துறைப்பூண்டி தெற்கு வீதி, உள்ளிட்ட பகுதியில் உள்ள ரேஷன் கடையில் பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்வினை திருத்துறைப்பூண்டி நகர் மன்ற தலைவர் கவிதா பாண்டியன் வட்ட வழங்கல் அலுவலர் பரமேஸ்வரி உள்ளிட்டோர் தொடங்கி வைத்தனர் பொதுமக்கள் ஏராளமானோர் பொங்கல் தொகுப்பினை வாங்குவதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்து பொங்கல் தொகுப்பினை வாங்கி சென்றனர்.

Similar News