மழலையர் பள்ளியில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் நிகழ்ச்சி.

வலங்கைமானில் தனியார் பள்ளியில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் மழலையர் குழந்தைகள் பொங்கல் வைத்தும் நடனம் ஆடியும் உற்சாகமாகக் கொண்டாடினர்.

Update: 2025-01-09 14:32 GMT
திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் தனியார் பள்ளியில் நடைப்பெற்ற பாரம்பரிய முறைப்படி வண்ணக்கோலம் இட்டும் கரும்புகளை தோரணமாக கட்டி பாரம்பரிய முறைப்படி மண் பானையில் பொங்கல் வைத்தும் சமத்துவ பொங்கலை மழலையர் பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் மகிழ்ச்சியாக கொண்டாடினார். அதனைத் தொடர்ந்து தமிழர்களின் கலாச்சாரத்தை பறைசாற்றும் வகையில் மாணவ மாணவிகளின் பாரம்பரிய உடை அணிந்து பார்வையாளர்களை மெய் சிலிர்க்கும் வகையில் குழந்தைகள் பல்வேறு வேடங்களில் அணிந்து கொண்டு நடனமாடி அசத்தினர். இந்நிகழ்ச்சியில் பள்ளியின் தாளாளர் நாகராணி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கரிகாலன், ஆக்ஸ்போர்ட் மழலையர் தொடக்கப்பள்ளியின் முதல்வர் முகமது யூசுப், தலைமை ஆசிரியர் ரேசாபி, மற்றும் பள்ளி ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்..

Similar News