மேலூரில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்.
மதுரை மாவட்டம் மேலூரில் இன்று மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறவுள்ளது.
மதுரை மாவட்டம் கிழக்கு மின் பகிர்மானக் கோட்டத்துக்குள்பட்ட பகுதிகளுக்கான மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம், மின்வாரியத்தின் மேலூர், உதவி செயற்பொறியாளர் (தெற்கு) அலுவலகத்தில் இன்று (ஜன.9) வியாழக்கிழமை காலை 11 மணிக்குத் தொடங்கி பகல் ஒரு மணி வரை நடைபெறவுள்ளது. இப் பகுதிகளைச் சேர்ந்த மின் நுகர்வோர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்று மின் நுகர்வில் உள்ள குறைகளைத் தெரிவித்துத் தீர்வு காணலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.