ஆரணி பெரிய கடை வீதி ரேஷன் கடையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு.
குடும்ப அட்டைதாரர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்பு.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் பெரிய கடை வீதியில் உள்ள ரேஷன் கடையில் பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழ்நாடு அரசு சார்பில் ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தரணிவேந்தன் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பை வழங்கினார். இதில் கோட்டாட்சியர் பாலசுப்ரமணியம், முன்னாள் எம்எல்ஏ ஆர்.சிவானந்தம், நகர மன்ற தலைவர் ஏ.சி. மணி , மாவட்ட பொருளாளர் தட்சிணாமூர்த்தி, மாவட்ட துணை செயலாளர் ஜெயராணிரவி, ஒன்றிய செயலாளர்கள் எஸ். எஸ்.அன்பழகன் ,எம். சுந்தர், துரைமாமது, எஸ்.மோகன்,மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.