நகர் பகுதியில் நடந்து சென்று ஆய்வு செய்த திருவாரூர் மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளர்.

திருவாரூர் மாவட்டத்தில் புதிதாக பொறுப்பேற்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருவாரூர் நகர் பகுதியில் நடந்து சென்று ஆய்வு செய்த திருவாரூர் மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளர் கருண் கரட்.

Update: 2025-01-09 14:45 GMT
திருவாரூர் மாவட்டத்திற்கு புதிய காவல் கண்காணிப்பாளராக கருண் கரட் கடந்த சில நாட்களுக்கு முன்பு பொறுப்பேற்றார். இதனைத் தொடர்ந்து இன்று திருவாரூர் நகர் பகுதி முழுவதும் நடந்து சென்று ஆய்வு மேற்கொண்டார் திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். குறிப்பாக திருவாரூரின் முக்கிய வீதிகளான வடக்கு வீதி, தெற்கு வீதி, கீழ வீதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடந்து சென்று கள ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து திருவாரூர் நகர காவல் நிலையத்தில் காவலர்களுடன் கலந்தாய்வில் ஈடுபட்டார். அப்போது வரும் பொங்கல் பண்டிகையை பாதுகாப்பாக கொண்டாடுவது குறித்தும், காணும் பொங்கல் அன்று பொது இடங்களுக்கு வரும் மக்களுக்கு எவ்வாறு சிறப்பான வகையில் பாதுகாப்பு அளிப்பது குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

Similar News