பேரூர்: மருதமலைக்கு நான்கு சக்கர வாகனங்கள் தடை!

ஜனவரி 14 முதல் 19 வரை நான்கு சக்கர வாகனங்கள் மலைக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

Update: 2025-01-09 03:15 GMT
தமிழகத்தில்,வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.ஜனவரி 14 முதல் 19 வரை நான்கு சக்கர வாகனங்கள் மலைக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.பக்தர்கள் இரண்டு சக்கர வாகனங்கள், மலைப்படிகள் அல்லது கோயில் பேருந்துகளில் சென்று சுவாமி தரிசனம் செய்யலாம் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.பொங்கல் விடுமுறையின் போது கோயிலுக்கு கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாக மருதமலை கோவில் நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவித்துள்ளது.

Similar News