சோதனை சாவடி போலீசார் 8 பேர் ஆயுதப்படைக்கு மாற்றம்

ஆரல்வாய்மொழி

Update: 2025-01-09 15:28 GMT
குமரி மாவட்டம் வழியாக  பிற மாவட்டங்களில் இருந்து கனிம வளங்களை ஏற்றிக்கொண்டு ஏராளமான டாரஸ் லாரிகள் வருகின்றன.   இதற்காக நாகர்கோவில் காவல்கிணறில் ஒரு சோதனை சாவடியும்,  குமாரபுரம் பகுதியில் மற்றொரு சோதனை சாவடியும்  அமைக்கப்பட்டுள்ளது. இதில் பிற காவல் நிலையங்களில்  பணிபுரியும் போலீசார், சிறப்பு உதவி ஆய்வாளர்கள் என ஒவ்வொரு சோதனை சாவடியில் 4 பேர் என 8 பேர் சுழற்சி முறையில் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.       இந்த நிலையில் நேற்று   இரவு சுமார் 11 மணியளவில் எஸ்.பி ஸ்டாலின் தலைமையில் போலீசார் ஆரல்வாய்மொழி  சோதனை சாவடியில் சென்றனர். அப்போது வாகன ஓட்டுநர்கள் கொடுத்த  ஆவணங்களில் கட்டுக்கட்டாக நோட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே தவறு செய்த கடிந்து கொண்ட எஸ் பி அந்த 4 போலீசார் உடனே ஆயுதப்படைக்கு மாற்றம் செய்வதாக அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.        பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சென்ற எஸ் பி குமாரபுரம் சந்திப்பு பகுதியில் உள்ள சோதனை சாவடி சென்றார். அப்போது முறைகேடாக  ஆவணம்  வைத்திருந்த சிலர்  ரூபாய் நோட்டை நீட்டினார்கள்.  இதை கண்ட எஸ் பி கையும் களவுமாக பிடித்து, அங்கிருந்த 4 போலீசாரையும்  ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவு பிறப்பித்தார்.

Similar News