அதிக ஒலி எழுப்பக்கூடிய 45 சைலன்சர்கள் பறிமுதல்
வேலூரில் அதிக ஒலி எழுப்பக்கூடிய சைலன்சர்களை பறிமுதல் செய்து போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில் இருச்சக்கர வாகனங்களில் விதிகளை மீறி மக்களை அச்சுறுத்தும் வகையில் அதிக ஒலி எழுப்பும் சைலன்சர்களை பலர் பொருத்தி இருப்பதாகவும், அதனால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. அதைத்தொடர்ந்து, வேலூர் மாநகர் பகுதியில் விதி மீறி வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள சைலன்சர்களை பறிமுதல் செய்வதற்காக வேலூர் போக்குவரத்து போலீசார் தீவிர வாகன தணிக்கை மேற்கொண்டனர். அப்போது, 45 இருசக்கர வாகனங்களில் இருந்து சைலன்சர்கள் அறுத்து அகற்றப்பட்டது. அதோடு அதிக ஒலி எழுப்பிய காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.மேலும், கார் மற்றும் இருசக்கர வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.