குமரி மாவட்டம் செண்பகராமன்புதூர் அருகே மர தொழிற்சாலை உள்ளது. இத்தொழிற்சாலையில் வட மாநிலம், குமரியை சார்ந்த தொழிலாளர்கள் ஏராளமானவர் பணிபுரிந்து வருகின்றனர். இன்று அதிகாலை 3 மணி அளவில் குடோனில் திடீரென்று தீப்பற்றி எரிந்தது. இதில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த மரப்பலகைகள் தீப்பற்றி எரிந்தது. தொழிலாளர்கள் உடனடியாக தொழிற்சாலை உரிமையாளர்களுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து நாகர்கோவில் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடி நாகர்கோவில், திங்கள் சந்தை தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து பல மணி நேரம் போராடி தீயணை அணைத்தனர். இதில் குடோனில் இருந்த அனைத்து மரப்பலகையும் முற்றிலும் எரிந்து நாசமான நிலையில் குடோனும் கீழே சரிந்து விழுந்தது. இதில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்ததாக கூறப்படுகிறது.