அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து*

அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து*

Update: 2025-01-09 07:12 GMT
கரூரில்: அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து கரூர் மாவட்டம் கடவூர் தாலுகா காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சின்னகாளியப்பன் மகன் பழனியப்பன் வயது (38). இவர் ஜனவரி 4-ம் தேதி இரவு 7:மணி அளவில், பாலவிடுதியில் இருந்து கடவூர் செல்லும் சாலையில் அவரது டூவீலரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத நான்கு சக்கர மோட்டார் வாகனம் ஒன்று, பழனியப்பன் டூவீலர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இந்த விபத்தில் பழனியப்பன் சம்பவம் இடத்திலேயே உயிரிலாந்தர்,அவரின் உடலை பிரேத பரிசோதனைக்காக திருச்சி மாவட்டம் மணப்பாறை அரசு மருத்துவமனையில் அனுப்பப்பட்டுள்ளது. சம்பவம் அறிந்த பழனியப்பனின் மனைவி பிரவீனா வயது (25) என்பவர் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், இது தொடர்பாக மோதிவிட்டு நிற்காமல் சென்ற அந்த வாகனத்தை பிடித்து வழக்கு பதிவு செய்தனர்

Similar News