திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடும்பத்துடன் தர்ணா போராட்டம்

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடும்பத்துடன் தர்ணா போராட்டம்

Update: 2025-01-10 09:59 GMT
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நில அபகரிப்பு செய்த திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க கோரி தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களை வலுகட்டாயமாக தூக்கி சென்ற போலீசாரால் பரபரப்பு. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த இடையம்பள்ளம் பகுதியை சேர்ந்த நாகராஜ் என்பவரின் குடும்பத்தினர் அதே பகுதியில் உள்ள ரஹீம் என்பவருக்கு சொந்தமான 7.37ஏக்கர் நிலத்தில் கடந்த 60ஆண்டுகளுக்கு மேலாக விவசாயம் செய்து வருகின்றனர். இதனையடுத்து ரஹீம் மற்றும் நாகராஜ் என்வருக்கு நிலம் பிரச்சனை காரணமாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. இதனையடுத்து அந்த இடத்தினை போலி பத்திரம் செய்து வாணியம்பாடி திமுக நகர செயலாளர் சாரதிகுமார், ஜெகன்பிரசாத்,கோணாம்மேடு ரவுடி ராஜா, துறையேறி சாரதி ஆகியோர் அடியாட்களை வைத்து நிலத்தை அபகரித்து கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இச்சம்பவம் குறித்து கடந்த சில தினங்களுக்கு முன்பு திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயாகுப்தாவிடம் புகார் மனு அளித்துள்ளனர். இந்த புகாரின் மீது எந்தொரு நடவடிக்கை எடுக்காததால் திமுகவினர் தொடர்ந்து அந்த நிலத்திடம் செல்லும் நாகராஜ் குடும்பத்தினரை கத்தி, கடப்பாரை கொண்டு எங்கள் மீதே எஸ்பி யிடம் புகார் அளிப்பாயா என்று கொலை மிரட்டல் மற்றும் பெண்களை ஆபாசமாக பேசி பாலியல் ரீதியாக துன்புறுத்தி வருகின்றனர். எனவே திமுகவினர் மீது கடும் நடவடிக்கை எடுக்ககோரி நாகராஜ் குடும்பத்தினர் கை குழந்தைகளோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதனை அறிந்த திருப்பத்தூர் நகர போலீசார் தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களை வலுக்கட்டாயமாக தூக்கி சென்றதால் அங்கு பெரும் காணப்பட்டு வருகிறது. மேலும் காவல் துறையினர் திமுகவின் தொடர் நில அபகரிப்புக்கு துணை போய் கொண்டு இருப்பதால் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Similar News