மெட்ரிக் பள்ளியில் பள்ளி மாணவ மாணவிகள் தமிழ் கலாச்சாரங்களை பின்பற்றும் வகையில் வேஷ்டி ,சட்டை, பாவாடை தாவணி அணிந்து பொங்கல் வைத்து கொண்டாட்டம் ....*
மெட்ரிக் பள்ளியில் பள்ளி மாணவ மாணவிகள் தமிழ் கலாச்சாரங்களை பின்பற்றும் வகையில் வேஷ்டி ,சட்டை, பாவாடை தாவணி அணிந்து பொங்கல் வைத்து கொண்டாட்டம் ....*
விருதுநகர் அருகே வி.டி. மணிகண்டன் நகரில் அமைந்துள்ள மெட்ரிக் பள்ளியில் பள்ளி மாணவ மாணவிகள் தமிழ் கலாச்சாரங்களை பின்பற்றும் வகையில் வேஷ்டி ,சட்டை, பாவாடை தாவணி அணிந்து பொங்கல் வைத்து கொண்டாட்டம் .... விருதுநகர் அருகே வி.டி மணிகண்டன் நகரில் மெட்ரிக் மேல்நிலைப் அமைந்துள்ளது. இந்தப் பள்ளியில் மழலையர் பள்ளி முதல் 10ம் வகுப்பு வரை சுமார் 700க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு பயிலும் மாணவ, மாணவிகள் அனைவரும் தமிழர்களின் பாரம்பரிய உடைகளான வேஷ்டி, சட்டை மற்றும் பாவாடை தாவணி மற்றும் ஆசிரியர்கள் சேலை அணிந்து கொண்டு தமிழ் கலாச்சாரத்தை கொண்டாடும் விதமாக பொங்கல் வைத்து கொண்டாடினார்கள். மேலும் மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் வட்டமாக நின்று கும்மிபாட்டு பாடியும், ஒயிலாட்டம் ஆடியும் மகிழ்ந்தனர் மேலும் மாணவ, மாணவிகளுக்கு பாரம்பரிய விளையாட்டு போட்டிகளான சிலம்பம், பம்பரம் விடுதல், கண்ணாமூச்சு விளையாட்டு, நண்டு நடை ஓட்டம், போன்ற தமிழ் பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பள்ளியின் தலைவர் தங்கராஜ், தாளாளர் வெங்கடேஸ்வரி, முதல்வர் மேபல் தேவி ஆகியோர் பரிசுகளை வழங்கினர்