பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு கிராமத்தில் வாரந்தோறும் வியாழக்கிழமை நடைபெறும் சந்தை நடைபெறும் அப்பகுதியில் சுகாதாரமின்றியும், சேறும் சகதியுமாக இருப்பதால் அதனை சீரமைத்து சந்தை நடத்த வேண்டும் என்று பொதுமக்கள் வியாபாரி விவசாயிகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வேண்டுகோள் வைத்துள்ளனர். உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் பல்வேறு போராட்டங்களை மாவட்ட நிர்வாகமும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் சந்திக்க நேரிடும் என பொதுமக்கள் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.