உடுமலை வாகன ஓட்டிகளுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கல்
வட்டார போக்குவரத்து அதிகாரிகள் பங்கேற்பு
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை வட்டத்திற்குட்பட்ட ஸ்ரீ ஜிவிஜி மகளிர் கல்லூரியின் முன்பு உள்ள பழனி சாலையில் தேசிய சாலை பாதுகாப்பு மாத நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் உடுமலை வட்டாரப் போக்குவரத்து அலுவலர் திரு.நடராஜன் தலைமை வகித்தார், இந்நிகழ்வில் சாலையில் வாகன ஓட்டிகளுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விதிமுறைகள் அடங்கிய துண்டு சீட்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. மேலும் தலைக்கவசம் மற்றும் சீட் பெல்ட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. உடன் வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர் ஜெயந்தி, போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் எண்ணம் போல் வாழ்க்கை அறக்கட்டளையின் நிறுவனர் முனைவர் எஸ்.ஏ.ஐ.நெல்சன் உட்பட்ட பலரும் கலந்து கொண்டனர்.