பொன்னமராவதி முத்தமிழ் பாசறையின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு அறங்காவலர் குழு தலைவர் மாணிக்கவேலு தலைமை வகித்தார். கூட்டத்தில் ஆண்டுதோறும் நடைறும் முத்தமிழ்ப்பாசறையின் தமிழர் திருநாள் விழா எதிர்வரும் நாட்களில் எந்த தேதியில் நடத்துவது, சிறப்பு அழைப்பாளர்களை தேர்வு செய்வது குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இதில் பாசறையின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.