திருப்பத்தூரில் தூய நெஞ்சக் கல்லூரியில் சமத்துவ பொங்கல் வைத்து கொண்டாட்டம்
சாம்பிய நாட்டு மாணவ மாணவிகளுடன் நடனமாடி சமத்துவ பொங்கல் கொண்டாடிய கல்லூரி நிர்வாகம்!
திருப்பத்தூர் மாவட்டம் சாம்பிய நாட்டு மாணவ மாணவிகளுடன் நடனமாடி சமத்துவ பொங்கல் கொண்டாடிய கல்லூரி நிர்வாகம்! திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூரில் தூய நெஞ்சக் கல்லூரி செயல்பட்டு வருகிறது தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில், வெளிநாடுகளில் இருந்தும் மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் இன்று கல்லூரியில் சமத்துவ பொங்கல் நடைபெற்றது இதில் தமிழரின் பாரம்பரியம் பிடித்ததன் காரணமாக சாம்பிய நாட்டை சார்ந்த மாணவ மாணவிகள் கலந்து கொண்டு நடனம் ஆடினர் மேலும் தமிழர்களின் பாரம்பரிய உடை அணிந்து பொங்கல் பானைக்கு பூஜை செய்து புத்தரிசியைச் சர்க்கரை, பால், நெய் சேர்த்துப் புதுப் பானையிலிட்டுப் புத்தடுப்பில் பொங்க வைத்துப் பொங்கல் பொங்கி வரும் வேளையில் பொங்கலோ பொங்கல் என முழுக்கமிட்டனர். மேலும் கல்லூரி மாணவர்கள் உரியடித்தல், நடனமாடுதல், கபடி விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகளும் நடைபெற்றன. இந்நிகழ்வில் கல்லூரியின் முதல்வர் கல்லூரியின் செயலர் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பொங்கல் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர்.