சீமானை கைது செய்ய கோரி திமுக சார்பில் டிஎஸ்பியிடம் புகார் மனு
சீமானை கைது செய்ய கோரி புகார்
தந்தை பெரியார் குறித்து அவதூறாக பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் வைத்து தென்காசி வடக்கு மாவட்ட திமுக சார்பில் தலைமை செயற்குழு உறுப்பினர் யுஎஸ்டி சீனிவாசன் தலைமையில் சங்கரன்கோவில் டிஎஸ்பி அறிவழகனே சந்தித்து புகார் மனு அளித்தனர். இந்த நிகழ்ச்சியில் மாநில மருத்துவர் அணி துணைச் செயலாளர் செண்பக விநாயகம், தென்காசி வடக்கு மாவட்ட பொருளாளர் சரவணன், மதிமுக மாவட்ட செயலாளர் சுதா பாலசுப்பிரமணியன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் இசக்கிதுரை, மாவட்ட விக்கி அணி அமைப்பாளர் பிச்சையா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தாலுகா செயலாளர் பழனி முருகன் உள்ளிட்ட ஏராளமான திமுக கூட்டணி பலர் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.