இழுவை வலையை பயன்படுத்துவதால் அழிந்து வரும் ஆலிவ் ரெட்லி ஆமைகள்
மீனவர்கள் இழுவை வலையை பயன்படுத்த வேண்டாம் என வேண்டுகோள்
நாகை பழைய கடற்கரையில், மாவட்ட வனத்துறை சார்பில், கடல் ஆமைகளின் முக்கியத்துவம் மற்றும் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு மணல் சிற்பம் செய்யும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. பொதுமக்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் கடல் மணலில் செய்த ஆமைகளை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் பார்வையிட்டார். நிகழ்ச்சியில், பெரிய ரெட்லி ஆமை, முட்டையில் இருந்து பொரித்து வரும் குஞ்சுகள் உள்ளிட்ட மணல் சிற்பங்களை வடிவமைத்திருந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளை மாவட்ட ஆட்சியர் பாராட்டினார். பொதுமக்கள் ஏராளமானோர் ஆர்வமுடன் பார்த்து சென்றனர். அதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த வனத் துறை அலுவலர் அபிஷேக் ரோமர் கூறியதாவது மீனவர்கள் இழுவை வலையை பயன்படுத்துவதால், அரிய வகையான ஆலிவ் ரெட்லி ஆமைகள் வலையில் சிக்கி படுகாயமடைந்து இறந்து விடுகின்றன. இதனால் அரிய வகை ஆலிவ் ரெட்லி ஆமைகள் அழிந்து வருகிறது. எனவே, மீனவர்கள் இழுவை வலையை பயன்படுத்த வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.