ஆட்சீஸ்வரர் கோயிலில் மஹா சனி பிரதோஷ விழா

ஆட்சீஸ்வரர் திருக்கோயிலில் மஹா சனி பிரதோஷ விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

Update: 2025-01-11 13:03 GMT
ஆட்சீஸ்வரர் திருக்கோயிலில் மஹா சனி பிரதோஷ விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்டம் புகழ்பெற்ற அச்சிறுப்பாக்கம் இளங்கிளியம்மன் உடனுறை ஆட்சீஸ்வரர் திருக்கோவிலில் மார்கழி மாத சுவாதி விசாகத்தை முன்னிட்டு சனி மஹா பிரதோஷ விழா நடைபெற்றது. இவ்விழாவில் நந்தியம் பெருமானுக்கு பால், தேன், பன்னீர் ,சந்தனம், இளநீர், உள்ளிட்ட 16 வகையான அபிஷேக பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்து பக்தர்களுக்கு தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது. அதன் பின்னர் நந்தி பகவான் கோவில் உட்பிறகராத்தில் மூன்று முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் உள்ளூர் மற்றும் வெளியூர்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Similar News