உடல் உறுப்புகள் தானம் வழங்கிய வாலிபருக்கு அரசு மரியாதை

மதுரை அருகே உடல் உறுப்புகள் தானம் செய்த வாலிபருக்கு அரசு மரியாதை வழங்கப்பட்டது

Update: 2025-01-11 15:57 GMT
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே விக்கிரமங்கலம் ஊராட்சி நரியம்பட்டி அவிசியபாண்டி மகன் தனபாண்டி(25).இவர் நேற்று முன்தினம் (9 ஆம் தேதி) நண்பர்களுடன் திருச்சிக்கு காரில் சென்று விட்டு திரும்பும் போது, மணப்பாறை அருகே நடந்த விபத்தில் படுகாயமடைந்தார்.திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற இவர் நேற்று (10 ஆம் தேதி) உயிரிழந்தார்.இதையடுத்து தனபாண்டியின் உடல் உறுப்புகளை தானம் செய்தனர்.இதனால் அவரது முக்கிய உறுப்புகள் சில நோயாளிகளுக்கு பொருத்தப்பட உள்ளது. இன்று (11 ஆம் தேதி) மாலை நரியம்பட்டிக்கு எடுத்து வரப்பட்ட உடலுக்கு உசிலம்பட்டி ஆர்.டி.ஓ.சண்முக வடிவேல், தாசில்தார் பாலகிருஷ்ணன், கருமாத்தூர் ஆர்.ஐ மணிமேகலை, விக்கிரமங்கலம் வி.ஏ.ஓ. சிவ ராஜன் மற்றும் செல்லம்பட்டி வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் சுதாகரன் உள்ளிட்ட பலர் மாலை வைத்து மரியாதை செய்தனர்.

Similar News