குணசீலம் அருகே தனியார் பேருந்து- லாரி நேருக்கு நேர் மோதி விபத்து

பேருந்தில் அமர்ந்திருந்த 25க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்தனர்

Update: 2025-01-11 18:20 GMT
நாமக்கல்லில் இருந்து திருச்சி நோக்கி 50க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு தனியார் பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. திருச்சி மாவட்டம், குணசீலம் அருகே உள்ள கோட்டூர் என்ற இடத்தில் பேருந்து வந்தபோது எதிரே நாமக்கல் நோக்கி வந்த லாரி மீது நேருக்கு நேர் பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தின் முன் பகுதி முற்றிலும் நொறுங்கி சேதம் அடைந்தது. இதில், பேருந்தில் அமர்ந்திருந்த 25க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்தினால் திருச்சி- நாமக்கல் நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து தகவல் அறிந்த வாத்தலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்தில் படுகாயம் அடைந்தவர்களை பொதுமக்கள் உதவியுடன் மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனைஅடுத்து கிரேன் எந்திரத்தின் உதவியுடன் விபத்துக்குள்ளான பேருந்து மற்றும் லாரி இரண்டையும் போலீசார் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர். மேலும், இந்த விபத்து குறித்து வாத்தலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News