சங்கரன்கோவிலில் சாதி, மதம் கடந்து சமத்துவ பொங்கல் விழா எம்எல்ஏ அழைப்பு

சாதி, மதம் கடந்து சமத்துவ பொங்கல் விழா எம்எல்ஏ அழைப்பு

Update: 2025-01-11 12:52 GMT
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ விடுத்துள்ள அறிக்கை: சாதி, மத பேத மின்றி சமத்துவம் பேணிகாக்க வேண்டும் என்பதற்காக சங்கரன் கோவில் சட்ட மன்ற உறுப்பினர் அலுவலகத்தில் வைத்து நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணிக்கு சமத்துவ பொங்கல் விழா நடை பெறுகிறது. இந்த விழாவில் திமுக நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் அனைத்து மதத்தினர். பொது மக்கள் அனைவரும் கலந்து கொண்டு பொங்கல் விழாவை சமத்துவ பொங்கல் விழாவாக சிறப் பிக்க வேண்டும், இந்த பொங்கல் திருநாள் ஜாதி, மதம் கடந்து சமத்துவத்தை பேணி தமிழர் திருநாளை ஒற் றுமையாக கொண்டாட அனை வரும் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Similar News