குடிநீர் பம்பு ஆபரேட்டர்கள் ஆர்ப்பாட்டம்!
கேவி குப்பத்தில் குடிநீர் பம்பு ஆபரேட்டர்கள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் வட்டார வளர்ச்சி அலுவலகம் எதிரில் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட குடிநீர், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, விசைப் பம்பு ஆபரேட்டர்கள், தூய்மைக் காவலர்கள் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் ஓய்வு ஊதியம் ரூ.3,500 வழங்க வேண்டும். பம்பு ஆபரேட்டர்களுக்கு பணிச் சீருடை வழங்க வேண்டும். துப்புரவு தூய்மை பணிகளுக்கான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.