மேல் அரசம்பட்டு அணை கட்ட வேண்டும்: ஏ.பி.நந்தகுமார் கோரிக்கை!

அணைக்கட்டு மேலரசம்பட்டு பகுதியில் அணை கட்ட வேண்டும் என சட்டமன்றத்தில் எம்எல்ஏ பேசினார்.

Update: 2025-01-11 13:33 GMT
தமிழக சட்டமன்றத்தில் அணைக்கட்டு தொகுதி எம்.எல்.ஏ. ஏ.பி.நந்தகுமார் பேசுகையில்," வேலூர் மாவட்டத்தில் இதுவரை பல ஆறுகளில் எங்கேயும் தடுப்பணை கட்டியது கிடையாது. குடிப்பதற்கு தண்ணீர் கிடையாது. பாலாற்றில் தண்ணீர் வந்ததும் கிடையாது. ஆனால், தற்போது 10 இடங்களில் தடுப்பணைகளை கட்டித் தந்தது இந்த அரசு. நீர்வளத்துறை அமைச்சர், இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு கடந்த 4 ஆண்டுகளாக பாலாற்றில் தண்ணீர் ஓடுகிறது. என்னுடைய அணைக்கட்டு தொகுதியில் மேல் அரசம்பட்டு அணை கட்ட வேண்டும் என்று வனத்துறை அமைச்சரிடம் கேட்டுக்கொண்டேன்.அவரும் செய்து தருவதாக சொன்னார்,"என பேசினார்.

Similar News