கே.பந்தாரப்பள்ளி பகுதியில் புதியதாக தொடங்கப்பட்ட வாரச்சந்தை!. கழுதையின் மீது உப்பு ஏற்றிச்சென்று சுவாமி வழிபாடு!
கே.பந்தாரப்பள்ளி பகுதியில் புதியதாக தொடங்கப்பட்ட வாரச்சந்தை!. கழுதையின் மீது உப்பு ஏற்றிச்சென்று சுவாமி வழிபாடு!
திருப்பத்தூர் மாவட்டம் கே.பந்தாரப்பள்ளி பகுதியில் புதியதாக தொடங்கப்பட்ட வாரச்சந்தை!. கழுதையின் மீது உப்பு ஏற்றிச்சென்று சுவாமி வழிபாடு! திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த கே. பந்தாரப்பள்ளியில் சனிக்கிழமை வாரச்சந்தை தொடங்கப்பட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்து வந்தனர். அதன் கோரிக்கையை ஏற்று நாட்றம்பள்ளி ஒன்றிய குழு தலைவர் வெண்மதி தலைமையில் சனிக்கிழமையான இன்று கே.பந்தாரப்பள்ளி பகுதியில் வாரச்சந்தை தொடங்கப்பட்ட நிலையில் அதற்கு ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். முன்னதாக கழுதையின் மீது உப்பு மூட்டையை வைத்து சுமந்து சென்று அருகே உள்ள காளியம்மன் கோவில் ஊர் பொதுமக்கள் சுவாமி வழிபாடு செய்தனர். அதன்பின்னல் வார சந்தையில் காய்கறிகள், பழங்கள், ஆடு மற்றும் கோழி விற்பனை அமோகமாக தொடங்கியது அதன் பின்னர் நாட்றம்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து பொதுமக்கள் ஆர்வத்துடன் பொருட்களை வாங்கிச் சென்றனர். மேலும் இந்த நிகழ்வில் நாட்றம்பள்ளி திமுக முக்கிய நிர்வாகிகள் தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்…