பரமத்தி வட்டாரத்தில் வேளாண்மை அதிகாரி ஆய்வு

பரமத்தி வட்டாரத்தில் வேளாண்மை அதிகாரி ஆய்வு மேற்கொண்டனர்.

Update: 2025-01-11 13:41 GMT
பரமத்திவேலூர். ஜன.11: பரமத்தி வட்டாரத்தில் வேளாண்மை இணை இயக்குனர் மற்றும் துணை இயக்குனர் ஆய்வு மேற்கொண்டனர். பரமத்தி வட்டாரத்தில் வேளாண்மை இணை இயக்குனர் கலைச் செல்வி, வேளாண்மைதுணை இயக்குனர் கவிதா ஆகியோர் மத்திய மற்றும் மாநிலத்திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வுகள் மேற்கொண்டனர். முதல்-அமைச்சரின் மண்ணு யிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் நெல் ஜெயராமனின் மரபுசார் நெல் ரகங்கள் பாதுகாப்பு இயக்கத் தின் கீழ் தூய மல்லி நெல் வயலை ஆய்வு செய்தனர். மற்றும் தேசிய சமையல் எண்ணெய் இயக்கத்தின் கீழ் எள் தொகுப்பு செயல் விளக்கத்திடல் வயல்களை ஆய்வு செய்தனர். பாரம்ப ரிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் மண்புழு உர படுக் கையை ஆய்வு செய்தனர். மேலும் வேளாண் கிடங்கில் உள்ள இடு பொருள்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின் போது வேளாண்மை உதவி இயக்குனர் சுதா, வேளாண்மை அலுவலர் திருமதி மோகனப்பிரியா, துணை வேளாண்மை அலுவலர் குப்புசாமி மற்றும் உதவி வேளாண்மை அலுவலர் கள் ஆகியோர் உடன் இருந்தனர்.

Similar News