பள்ளிச் சிறார்கள் மாட்டுவண்டியில் ஏறி உற்சாகம் பொங்கல் விழா கொண்டாட்டம்

தனியார் பள்ளி கல்லூரியில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் சிறுவர் சிறுமியர் மாட்டு வண்டியில் ஏறி பொங்கல் வாழ்த்து கூறி உற்சாக கொண்டாட்டம்;

Update: 2025-01-11 14:08 GMT
. மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா செம்பனார்கோவிலில் உள்ள கலைமகள் கல்வி குழுமத்தின் சார்பில் பள்ளி மற்றும் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது பாரம்பரிய முறையில் சிறுவர் சிறுமியர் முதல் மாணவர்கள் அனைவரும் வேஷ்டி புடவை அணிந்து வளாகத்தில் கரும்பு தோரணம் கட்டி சமத்துவ பொங்கல் வைத்து பொங்கலோ பொங்கல் என உற்சாகமிட்டு கொண்டாடினர் மேலும் மாணவர்கள் பெற்றோர்கள் பொதுமக்களுக்கான கோலப்போட்டி நடைபெற்றது வண்ண வண்ண கோலங்கள் மற்றும் காய்கறிகள் மூலம் கோலமிட்டு உற்சாகம் அடைந்தனர் சிறந்த கோலத்திற்கு பரிசுகள் வழங்கப்பட்டது அதேபோன்று மாணவர்கள் பங்கேற்ற சிலம்பாட்டம் உள்ளிட்ட பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது பின்னர் சிறுவர் சிறுமியருக்கு மாட்டு வண்டி பூட்டி அதில் சிறுவர் சிறுமிகளை ஏற்றி மாட்டு வண்டி ஊர்வலமாக சென்றனர் மாட்டு வண்டியில் ஏறிய சிறுவர் சிறுமியர் உற்சாகம் அடைந்தனர் மகிழ்ச்சியில் திகைத்தனர்.

Similar News