காலநிலை மாற்றம் |குறித்து கல்லூரி மாணவிகள் ரங்கோலி வரைந்து விழிப்புணர்வு
காலநிலை மாற்றத்தால் மயிலாடுதுறை மாவட்டம் அதிகமாக பாதிப்புக்கு உள்ளாகி உள்ள நிலையில், மயிலாடுதுறையில் கல்லூரி மாணவிகள் ரங்கோலி வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்;
:- மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் உள்ள தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரியில் இன்று ரங்கோலி போட்டி நடத்தப்பட்டது. சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் துறையின் சார்பில் நிலைத்து நீடிக்கும் வாழ்வியல் முறை என்ற தலைப்பில் மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இப்போட்டி நடத்தப்பட்டது. காலநிலை மாற்றத்தால் மயிலாடுதுறை மாவட்டம் அதிகமாக பாதிப்புக்கு உள்ளாகி உள்ள நிலையில், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, காற்று மாசுபாடு, நீர் மாசுபாடு, மரக்கன்றுகள் நடுதல், பாலித்தீன் பயன்பாட்டை குறைத்தல் முதலிய கருப்பொருள்களில் மாணவிகள் ரங்கோலி வரைந்தனர். கல்லூரி முதல்வர் சுவாமிநாதன் தொடக்கி வைத்த இப்போட்டியில் 32 மாணவிகள் பங்கேற்று பல்வேறு தலைப்புகளில் ரங்கோலி வரைந்து அசத்தினர். வெற்றி பெற்ற மாணவிகளுக்கு முறையே ரூ.2000, ரூ.1500, ரூ.1000 ரொக்கப்பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் தேசிய பசுமை படையின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செல்வகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.