தோன்கனிக்கோட்டை: விவசாய நிலத்தில் புகுந்த மூன்று காட்டு யானைகள்

தேன்கனிக்கோட்டை: விவசாய நிலத்தில் புகுந்த மூன்று காட்டு யானைகள்

Update: 2025-01-11 23:29 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் 50-திற்கும் மேற்பட்ட காட்டு யானைகள் சுற்றித்திரிகின்றன. இந்த யானைகள் பல்வேறு குழுக்களாக பிரிந்து விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. அதேபோல் மட்ட மத்திகிரி கிராமத்தில் நேற்று காலை மூன்று காட்டு யானைகள் விவசாய நிலங்களில் புகுந்து அவரை, துவரை செடிகளை தின்று சேதப்படுத்தின. இதைகண்ட கிராமமக்கள் பட்டாசுகள் வெடித்து 3 யானைகளையும் நொகனூர் வனப்பகுதிக்குள் விரட்டினர்.

Similar News