பொங்கல் கொண்டாட்டம்

வேளாளர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் பொங்கல் கொண்டாட்டம்

Update: 2025-01-12 04:13 GMT
வேளாளர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 25. ஆம் ஆண்டின் தொடக்கத்தை முன்னிட்டு தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையாள பொங்கல் விழா 11/01/2025 அன்று மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழா காலை 9.00 மணிக்கு தொடங்கி, தமிழர்களின் பாரம்பரிய கலையான மயிலாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம், மான் கொம்பு ஆட்டம், காவடி ஆட்டம், ஒயிலாட்டம், கட்டைக்கால் ஆட்டம், பறையாட்டம், கரகாட்டம், மாடு ஆட்டம், புலி ஆட்டம், சிலம்பாட்டம், சாட்டை குச்சி ஆட்டம் மற்றும் பெரிய கம்பு ஆட்டம் போன்றவை ஒன்றன் பின் ஒன்றாக மிகச் சிறப்பான முறையில் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து பொது பொங்கல் வைத்தல் மற்றும் பொங்கல் வைத்தல் போட்டி நடைபெற்றது. தை பிறந்தால் வழி பிறக்கும் என்னும் விவசாயிகளின் நம்பிக்கைக்கு ஏற்ப இத்தைமாதத்தின் பிறப்பை முன்னிட்டும் கல்லூரியின் 25-ஆம் ஆண்டு தொடக்கத்தை முன்னிட்டும் கல்லூரி மாணல் மாணவிகள் இப்பொங்கல் விழாவினை மிகவும் மகிழ்ச்சியாக பொங்கல் வைத்து கொண்டாடினார்கள். மேலும் தமிழர்களின் பாரம்பரியமான வள்ளி கும்மியாட்டம், பெருஞ்சலங்கை ஆட்டம், கும்மி அடித்தல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அதன் பின் உசியடித்தல், கயிறு இழுத்தல் போன்ற போட்டிகள் நடைபெற்றன. இப்போட்டிகளில் மாணவ மாணவிகள் மிகவும் உற்சாகத்துடன் கலந்து கொண்டார்கள்.வேளாளர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் செயலாளர் மற்றும் தாளாளர் திரு.S.D.சந்திரசேகர் அவர்கள், தலைவர் C.ஜெயக்குமார் அவர்கள், அறக்கட்டளை உறுப்பினர்களான திரு.C.பாலசுப்பிரமணியன் மற்றும் திரு.M. யுவராஜா அவர்களும் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி விழாவை சிறப்பித்தனர். கல்லூரி முதல்வர் முனைவர் M.ஜெயராமன் அவர்கள் முன்னிலையில், விழா ஒருங்கிணைப்பாளார்களான முனைவர் M.ஈஸ்வரமூர்த்தி, மற்றும் முனைவர் V.சந்திரசேகர் அவர்கள், விழாவை ஏற்பாடு செய்தனர். கல்லூரி நிர்வாக மேலாளர் திரு.N.பெரியசாமி அவர்கள் இவ்விழாவை ஏற்பாடு செய்ய பெரிதும் உறுதுணையாக இருந்தார்.இப்பொங்கல் விழாவில் கல்லூரி பேராசிரியர்கள், 3000 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர். இவ்விழாவானது மிகவும் ஆராவாரத்துடன் பாரம்பரிய முறையில் கொண்டாடப்பட்டது.

Similar News

தீ விபத்து