விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் வெடிவெடுத்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் 35 ஆண்டுகளுக்கு மேலான கடுமையான உழைப்பால் நமது விடுதலை சிறுத்தைகள் கட்சி இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகாரம் பெற்ற கட்சியாகவும் பானை சின்னத்தை நமது கட்சியின் நிரந்தர சின்னமாகவும் நமக்கு பெற்று விசிக தலைவருக்கு நன்றி
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, பெரம்பலூர் மேற்கு மாவட்டம் கட்சியின் வளர்ச்சி குறித்து மாவட்ட நிர்வாக குழு கூட்டம் மேற்கு மாவட்ட கழக செயலாளர் ரத்தினவேல் தலைமையில் மாவட்ட தலைமை அலுவலகம் பாலக்கரை பகுதி நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் வரவேற்புரை: தங்க. சண்முகசுந்தரம் நகரசெயலாளர். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன 1, நமது எழுச்சித்தமிழரின் 35 ஆண்டுகளுக்கு மேலான கடுமையான உழைப்பால் நமது விடுதலை சிறுத்தைகள் கட்சி இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகாரம் பெற்ற கட்சியாகவும் பானை சின்னத்தை நமது கட்சியின் நிரந்தர சின்னமாகவும் நமக்கு பெற்று கொடுத்த வாழும் புரட்சியாளர் ஒடுக்கப்பட்ட விளிம்பு நிலை மக்களின் சங்கநாதம் எழுச்சித்தமிழர் தொல். திருமாவளவன் அவர்களுக்கு பெரம்பலூர் மேற்கு மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பாக நெஞ்சார்ந்த நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்வதுடன் இச்சிறப்பு நிலையை அடைய தமிழக முழுவதும் கடுமையாக உழைத்து தியாகம் செய்த அனைத்து விடுதலைச் சிறுத்தைகளுக்கும் பாராட்டுதல்களையும் நன்றிகளையும் இம்மாவட்ட நிர்வாக குழு தெரிவித்துக் கொள்கிறது. 2, கட்சியின் மறு சீரமைப்பு பணியில் சிறப்பாக வழிநடத்திய மேலிட பொறுப்பாளர்கள் பா. தாமரைச்செல்வன்மு.தனகோடி, தயா. தமிழன்பன், வெ.கடம்பன், ஆகியோருக்கும் மறு சீரமைப்பு பணியில் அயராது பாடுபட்ட மாவட்ட, மாநில,ஒன்றிய, நகர,கிளை, மற்றும் மகளிரணியினர் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளை இம்மாவட்ட நிர்வாக குழு தெரிவித்துக் கொள்வதுடன் கட்சி மறு சீரமைப்பு பணி வியூகத்தை வகுத்துக் கொடுத்து வழிநடத்திய எழுச்சித்தமிழருக்குஇம்மாவட்ட நிர்வாக குழு மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறது. மேலும் பெரம்பலூர் மேற்கு மாவட்டத்தில் கட்சி பொறுப்புக்கு 188 பேர் வரைவோலை கொடுத்து விண்ணப்பித்து ரூபாய்4,25,000/= தொகையை தலைமைக்கு செலுத்த உதவிய பெரம்பலூர் மேற்கு மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினருக்கு இம்மாவட்ட நிர்வாக குழு நெஞ்சார்ந்த நன்றியினை செலுத்துகிறது. 3, பெரம்பலூர் மாவட்டம் பெரம்பலூர் வட்டம் வடக்கு மாதவி கிராமத்தில் பொது இடத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கொடியை ஏற்ற அனுமதி மறுக்கும் பெரம்பலூர் மாவட்ட வருவாய்த்துறை மற்றும் பெரம்பலூர் மாவட்ட காவல்துறையையும் இம்மாவட்ட நிர்வாக குழு கண்டிப்பதுடன் வடக்கு மாதவி கிராமத்தில் உடனடியாக கட்சிக்கொடி ஏற்ற அனுமதிக்க வேண்டும் என்றும் பெரம்பலூர் மாவட்டம் முழுவதும் கட்சி விளம்பர பதாகைகள் கிழிக்கப்படுவதையும் கொடியேற்ற அனுமதிக்காததையும் கண்டிக்கிறோம், பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டத்தில் உள்ள மரவநத்தம் கிராமத்தில் சாதி இந்துக்களுடன் வருவாய்த் துறையும் காவல்துறையும் இணைந்து தீண்டாமை சுவர் எழுப்பும் அரச பயங்கர சாதிய ஆதிக்கத்தை வன்மையாக கண்டிக்கின்றோம், பெரம்பலூர் மாவட்டம் முழுவதும் உள்ள பஞ்சமர் தரிசு நிலங்களை ஆக்கிரமித்து வைத்துள்ள சாதி இந்துக்களிடம் இருந்து மீட்டளிக்க பலமுறை மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தியும் அதனை தொடர்ந்து செயல்படுத்தாத பெரம்பலூர் மாவட்ட வருவாய் நிர்வாகத்தையும் இம்மாவட்ட நிர்வாக குழு வன்மையாக கண்டிப்பதுடன், வடக்கு மாதவி கிராமத்தில் கொடியேற்ற அனுமதிக்குமாறும், மாவட்டம் முழுவதும் கட்சி விளம்பரபதாகைகள் கொடிக்கம்பங்களை சேதப்படுத்துவதை தடுத்து நிறுத்த வேண்டியும், மரவநத்தம் கிராமத்தில் எழுப்பப்படும் தீண்டாமை சுவர் எழுப்பப்படாமல் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும், பஞ்சமர் தரிசு நிலங்களை மீட்டு நிலமில்லாத ஆதி திராவிடர்களுக்கு வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருகிற 28.01.2025 ஆம் தேதி பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது என இம்மாவட்ட நிர்வாக குழு தீர்மானிக்கிறது. 4, நமது விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தேர்தல் ஆணையத்தில் அங்கீகாரம் பெற்றது மற்றும் நமக்கென சொந்தமான சின்னமாக பானை சின்னத்தை பெற்றுள்ளதை கொண்டாடும் விதமாக பெரம்பலூர் மேற்கு மாவட்டம் முழுவதும் கட்சி கொடி ஏற்றி இனிப்பு வழங்கி கொண்டாடுவது என இம்மாவட்ட நிர்வாக குழு தீர்மானிக்கிறது. 5, பெரம்பலூர் நகரத்தில் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட பாதாள சாக்கடை திட்டம் போதிய அளவில் இல்லை தற்போது பெருகி உள்ள மக்கள் தொகையை கணக்கில் கொண்டு நவீன மயமாக்கப் பட்ட பாதாள சாக்கடையை உருவாக்க வேண்டும் என பெரம்பலூர் மாவட்ட அரசு நிர்வாகத்தை இம்மாவட்ட நிர்வாக குழு கேட்டுக்கொள்கிறது . 6, பெரம்பலூர் மாவட்டம் முழுவதும் தலைவிரித்தாடும் சந்து கடை சாராயத்தை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும் என மாவட்ட காவல் துறையை இம்மாவட்ட நிர்வாக குழு கேட்டுக்கொள்கிறது. 7, பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட நான்கு ரோடு பகுதியில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் வந்து செல்லும் சூழ்நிலையில் இயற்கை உபாதையை கழிக்க மிகவும் சிரமப்படுகிறார்கள் ஆகவே பெரம்பலூர் மாவட்ட அரசு நிர்வாகம் நான்கு ரோட்டில் ஒரு நவீன கழிவறை கட்டிடம் கட்டி தர வேண்டும் என இம்மாவட்ட நிர்வாக குழு தீர்மானிக்கிறது. 8, சமீப காலமாக புரட்சியாளர் அம்பேத்கரையும் தந்தை பெரியாரையும் இகழ்ந்து பேசி அரசியல் ஆதாயம் தேட நினைக்கும் கீழ்த்தரமான அரசியலை செய்து வரும் அற்ப அரசியல்வாதிகளை இம்மாவட்ட நிர்வாக குழு வன்மையாக கண்டிக்கிறது இப்போக்கை சாதிய மத மனோபாவத்துடன் அணுகும் அரசியல்வாதிகள் நிறுத்திக் கொள்ள வேண்டும் என இம்மாவட்ட நிர்வாக குழு எச்சரிக்கிறது. இந்த நிகழ்வில் அனைவருக்கும் பொங்கல் திருநாளை முன்னிட்டு பெரம்பலூர் மேற்கு மாவட்டத்தின் சார்பாக கட்சியினருக்கு மாவட்ட செயலாளர் ம.க.ச. இரத்தினவேல் இனிப்பு, காரம், வழங்கி பொங்கல் வாழ்த்து தெரிவித்தார். முன்னிலை: நா.கிருஷ்ணகுமார் மாவட்ட துணை செயலாளர், எம்.பி.மனோகரன் பெரம்பலூர் மேற்கு ஒன்றிய செயலாளர், இர.பிச்சைப் பிள்ளை ஒன்றிய செயலாளர் பெரம்பலூர் கிழக்கு, எ.வெற்றியழகன் ஒன்றிய செயலாளர் வேப்பந்தட்டை மேற்கு, சி.பாஸ்கர் ஒன்றியசெயலாளர் பெரம்பலூர் கிழக்கு, வே.ரேணுகா வேல்முருகன் மாவட்டச்செயலாளர் ம.க.வி.இயக்கம், இரா.செல்வாம்பாள் மாவட்ட பொருளாளர் ம.க.வி.இயக்கம், ப.இராசாத்தி வேப்பந்தட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் ம.க.வி.இயக்கம், வே.சுமதி பெரம்பலூர் நகரசெயலாளர் ம.க.வி.இயக்கம், P.வீரலெட்சுமி மாவட்ட துணைசெயலாளர் ம.க.வி.இயக்கம், வான்மதி பெரம்பலூர் மேற்கு ஒன்றியசெயலாளர் ம.க.வி.இயக்கம், கருத்துரை: வீர. செங்கோலன் மாநில செயலாளர், பொன். பாவாணன் முன்னாள் மாவட்ட அமைப்பாளர், மன்னர் மன்னன் நாடாளுமன்ற தொகுதி துணைசெயலாளர், சி.தமிழ்மாணிக்கம் முன்னாள் மாவட்டச்செயலாளர், கா.அ.தமிழ்குமரன் மாநில து.செ.மு.மா.க. அண்ணாதுரை மாநில து.செ.க.பொ.வி.இ, பிரேம்குமார் மாநில து.செ.அ.ஊ.ஐ.பே, கலந்துகொண்டவர்கள்: சி.அய்யாகண்ணு மாவட்ட அமைப்பாளர் சு.பாலன் சமூக ஊடக மையம் மாவட்ட அமைப்பாளர், ப.காமராஜ் மாவட்ட துணை அமைப்பாளர், கரு.அய்யம்பெருமாள் மாவட்ட அமைப்பாளர் (மு.மா.க) பெ.முரசொலி காட்சி ஊடகம் மாவட்ட அமைப்பாளர், க .கண்ணதாசன் ஒருங்கிணைப்பாளர் ஆலத்தூர் மேற்கு, செ.திருநாவுக்கரசு பெரம்பலூர் நகரம் அ.பிச்சைப்பிள்ளை ஒன்றியபொருளாளர் வே.மேற்கு, அழகு தாஸ் பெரம்பலூர் நகரம், பழனிவேல் ராஜன் மாவட்ட அமைப்பாளர் மருத்துவர் அணி, சதிஷ் வடக்கு மாதவி கிளை செயலாளர், பிரசாந்த் வடக்கு மாதிரி கிளைக் பொறுப்பாளர், துரைமுருகன் நடைபாதை வியாபாரிகள் சங்கம், சி.மதியழகன் முன்னாள் ஒன்றிய செயலாளர், அகரம் இராஜேந்திரன் கிளைசெயலாளர், உட்பட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பலர் பங்கேற்றனர். .