வாலிபர் பலி

ஈரோட்டில் ரயிலில் அடிபட்டு வாலிபர் பலி

Update: 2025-01-12 07:50 GMT
ஈரோடு சூரம்பட்டி நேதாஜி வீதி தேவராஜ் மகன் சுரேஷ் குமார் (39). ஈரோட்டில் பைனான்ஸ் தொழில் செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி பிரேமா என்ற மனைவி, இரு பெண் குழந்தைகள் உள்ளனர். மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தார். அவ்வப்போது மது அருந்தி வந்தார். பைனான்ஸ் விஷயமாக வெளியே சென்று வருவதாக தன் தாயிடம் கூறி விட்டு சுரேஷ் குமார் நேற்று முன் தினம் காலை வெளியே சென்றார். ஈரோட்டிற்கும் –தொட்டிபாளையத்துக்கும் இடையே உள்ள தண்டவாளத்தை கவனக்குறைவாக, அஜாக்கிருதையாக கடக்க முயன்றுள்ளார். அப்போது வந்த ரயில், சுரேஷ் குமார் மீது மோதியது. இதில் தோள் பட்டை துண்டானது. நடு மண்டையில் பலத்த ரத்த காயம் ஏற்பட்டும், காலில் முறிவு ஏற்பட்டு அதே இடத்தில் பலியானார். தகவல் அறிந்த ஈரோடு ரயில்வே போலீசார் உடலை மீட்டு, ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Similar News