கேலக்ஸி பள்ளி மாணவ மாணவியர்களுடன் பொங்கல் கொண்டாடிய மாவட்ட கல்வி அலுவலர்

பொங்கல் வைத்து குழந்தைகள் மற்றும் மூத்தோர்களுக்கு ஊட்டினர். மூத்தவர்கள் அனைவரையும் ஆசீர்வாதம் செய்தனர்.

Update: 2025-01-12 10:50 GMT
பெரம்பலூர் வெங்கலம் கேலக்ஸி பள்ளி சார்பில் ஆற்றும் கரங்கள் சிறப்பு இல்லத்தில் சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது. அறக்கட்டளை தலைவர் நா.ஜெயராமன் தலைமை வகித்தார். பெரம்பலூர் மாவட்ட கல்வி அலுவலர் (தனியார் பள்ளி) K.லதா சிறப்பு விருந்தினராக வருகை தந்து சிறப்பித்தார். கேலக்ஸி பள்ளித் தாளாளர் ஜெயலட்சுமி ஆசிரியைகள் மற்றும் மாணவச் செல்வங்களுடன் வந்திருந்தனர். அனைவரும் சேர்ந்து பொங்கல் வைத்து குழந்தைகள் மற்றும் மூத்தோர்களுக்கு ஊட்டினர். குழந்தைகள் தங்களது சேமிப்புத் தொகையில் மூத்தோர்களுக்கு தேவையான பொருட்கள் வழங்கியதை கல்வி அலுவலர் பாராட்டினார். பள்ளியின் சார்பில் இல்லத்திற்கு மளிகை பொருட்கள் வழங்கினர். பொங்கல் விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியைகள் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர். பொங்கல் விழாவினை ஆற்றும் கரங்கள் சிறப்பு இல்ல செவிலியர்கள் அனிதா மற்றும் செல்வி.அபிராமி ஆகியோர் ஒருங்கிணைத்திருந்தனர். அனைவரும் பொங்கலோ பொங்கல் என மகிழ்ச்சியை தெரிவித்தனர். குழந்தைகள் அனைவரும் மூத்தோர்களிடம் ஆசி பெற்று சென்றனர்.

Similar News